facebook

பொதுமக்களின்பணத்தை வேட்டையாடும் மகிந்த


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது பதவியில் இருந்து விலகி செல்லும் போது ஜனாதிபதி பதவியில் இருப்பவருக்குரிய மூன்று கோடியே 9 லட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் இருந்தன.
இந்த நிலையில், ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் ஜனாதிபதிக்கான வாகனங்கள அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் படி ஜனாதிபதிக்கு 340 கோடியே 6 லட்சம் பெறுமதியான வாகனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, நாட்டில் போர் நடைபெறாத சூழ்நிலையில், குண்டு துளைக்காத வாகனங்களை இறக்குமதி செய்யும் தேவை ஏற்படவில்லை.
எனினும் கடந்த வருடத்தில் மாத்திரம் ஒரு கோடியே 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் கடந்த 8 வருடங்களில் 341 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான வாகனங்களை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த தொகையானது சந்திரிக்காவின் ஆட்சிக்கு பின்னர் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களின் சதவீதத்தின் படி 1005 வீதமாகும்.
நிதியமைச்சின் 2013 ஆம் ஆண்டுக்கான அறிக்கை இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments