facebook

புலிகளின் குண்டுகளை வைத்திருந்தாராம்! - முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக புது வழக்கு

விடுதலைப் புலிகளின் குண்டுகளை வைத்திருந்ததாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு எதிராகவும், மேலும் இரண்டு பேருக்கு எதிராகவும் இவ்வாறு குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ கிராம் எடையுடைய சில வகைக் குண்டுகளை வாஸ் குணவர்தனவும் அவரது சகாக்களும் வைத்திருந்தனர் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
  
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன, ரவிந்து குணவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments