facebook

அதிகாரப் பரவலாக்கம் நாட்டின் அபிவிருத்தியை வேகமாக்கும் : ஐ.தே.க

நாட்டில் அதிகாரத்தை பரவலாக்கினால் நாட்டின் அபிவிருத்தி வேகமடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலும் அவர் இதன் போது கருத்து வெளியிட்டார்.
இந்திய பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி பேசப்பட்டுள்ளது.
13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகாரங்களை அமுல்படுத்துவது சம்பந்தமாகவும் இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.
அதிகாரத்தை பரவலாக்கும் எந்த அக்கறையும் அரசாங்கத்திற்கு இல்லை எனவும், அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி வேகமாகக் கூடும் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments