facebook

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான மீனவர்களையும் விடுவி்க்க அரசு நடவடிக்கை

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  கைதாகி, 910 நாட்கள் இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை விடுவிக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரசாத், லாங்லெட், எமர்சன், வில்சன், அகஸ்டஸ் ஆகிய 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு இன்னும் சில தினங்களில் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் என மீனவர் சங்க தலைவர் யூ. அருளானந்தம் தெரிவித்தார்.
 
பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு, மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.
 
இதையறிந்த, ராமேஸ்வரம் மீனவர்களும், உறவினர்களும் , ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். அப்போது,' பிரதமர் மோடி வாழ்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி' என, மீனவர்கள் கோஷமிட்டனர். 

Post a Comment

0 Comments