facebook

அமெரிக்க தொழிலதிபரின் உயிரை காப்பாற்றிய மிஸ்டர் பீன்

விபத்தில் சிக்கி கொண்ட அமெரிக்க தொழிலதிபரை பிரபல நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் காப்பாற்றியுள்ளார்.
தொலைக்காட்சியில் மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைப்பவர் நடைகர் ரோவன் அட்கின்சன்( 59).
இவர் நேற்று இத்தாலியில் தனது காரில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் ஒரு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதை பார்த்தார்.
உடனடியாக காரை விட்டு இறங்கி காரினுள் சிக்கியவர்களை மீட்க உதவி செய்துள்ளார். பின்னர் உடனடியாக இந்தாலிய பொலிசாருக்கும், மீட்புப்படையினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் பீன் உதவியால் சரியான நேரத்தில் அமெரிக்க தொழிலதிபரும், அவருடைய ஓட்டுநரும் காப்பாற்றப்பட்டனர்.
மிஸ்டர் பீன் அவர்களின் மனிதாபமானத்தை மீட்புக்குழுவினர்கள் பாராட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments