facebook

அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ்

ஆப்கானிஸ்தானில் தற்போது நிலை கொண்டுள்ள 9800 அமெரிக்க இராணுவப் படையினரை மீளவும் அமெரிக்காவிற்கு அழைக்க திட்டம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
 
வெள்ளை மாளிகையில் நேற்று (27)இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
 
தற்போது ஆப்கானிஸ்தானில் 32,000 அமெரிக்க படையினர் நிலை கொண்டுள்ளனர். முதற்செயற்பாடாக 9200 படைவீரர்கள் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
 
இச் செயற்பாட்டின் மூலம் 2016 ஆம் ஆண்டளவில் அமெரிக்கப் படையினரை முழுமையாக வாபஸ் பெறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
மீதமுள்ள அமெரிக்க படையினர் ஆப்கானில் உள்ள அமெரிக்க தூதரகத்தினை காப்பதிலும், ஆப்கானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள படைவீரர்களைக் காக்கும் பணியிலும், உள்ளூர் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள்.

Post a Comment

0 Comments