facebook

பெண்ணின் பெயரில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து காதலியாக நடித்து பல இலட்சம் மோசடி செய்த நபர்

பெண்ணொருவரின் பெயரில் இணையதள ‘பேஸ்புக்’ கணக்கை நடத்திச் சென்ற இளைஞரொருவர் வெளிநாட்டில் தொழில் புரிந்த இளைஞரொருவருடன் காதல் தொடர்பு கொண்டு ஏழரை லட்ச ரூபாவை மோசடி செய்த குற்றத்திற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. நிசாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
5000 ரூபா ரொக்கப் பிணையிலும் பத்து லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட இந்த நபர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் முறைப்பாட்டையடுத்தே இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தனது மாமியின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபர் பெண்ணொருவரின் பேஸ்புக்கில் தோன்றி வெளிநாட்டில் பணிபுரிந்த இளைஞரொருவருடன் காதல் தொடர்பு கொண்டு தொடர்ந்து உரையாடி வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சந்தேக நபரின் மாமியும் மற்றொரு பெண்ணும் அவ்வப்போது 7,54,141 ரூபாவை காசோலை மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments