facebook

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன – ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத்திற்கு எதிரான இ;ந்தியாவின் போராட்டத்திற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்களை பாதுகாக்கும் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த வெற்றியே இந்தப் பிரதமர் பதவி என ஜனாதிபதி, நரேந்திர மோடியை வாழ்த்தியுள்ளார். பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவரை ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்தியுள்ளார். இந்திய மக்கள் நரேந்திர மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உறவு மேலும் மேலும் வலுப்பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நரேந்திர மோடியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்து காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments