facebook

இணையத்தளங்கள் மீதான தடை மக்களின் அடிப்படை உரிமை மீறல்: மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு

இலங்கையில் இயங்கும் இணையத்தளங்களை தடை செய்தமையானது, நாட்டின் அரசியல் அமைப்பில் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் என கருத முடியும் என இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் பிரதீபா மாஹானாஹேவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணையத்தளங்களை தடை செய்வதன் மூலம் அரசியல் அமைப்பின் 14 (1) (அ) சரத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல்.
பல செய்தி இணையத்தளங்களை அரசாங்கம் தடைசெய்துள்ளமைக்கு எதிராக இணையத்தளங்களுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments