facebook

பால்மா விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு ஐதேக கோரிக்கை

பால்மா விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் பால் மாவின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் பால் மா 450 டொலர்களுக்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு மெற்றிக் தொன் பால் மாவின் விலை 5200 டொலர்கள் வரையில் உயர்வடைந்திருந்தது.
இதன் காரணமாக அரசாங்கம் பால் மாவின் விலையை வெகுவாக உயர்த்தியிருந்தது.
எனினும், உலக சந்தையில் பால் விலை குறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் பால் மாவின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
கூட்டமைப்பு அரசாங்கம் கறுப்புச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது கையிருப்பில் உள்ள பால் மா பழைய விலையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டவை எனவும் இதனால் விலையை குறைக்க முடியாது எனவும் உயர்கல்வி பிரதி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments