facebook

மாளிகாவத்தை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

கொலைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் களுத்துறையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தையில் கடந்த 15ஆம் திகதி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, பின்னர் சுட்டுக் கொலைசெய்த சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் களுத்துறை மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்களிடமிருந்து சிறியரக துப்பாக்கி ஒன்றும், 38 தோட்டாக்களும், கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Post a Comment

0 Comments