facebook

ஓசோன் அதிகாரிகள் வலையமைப்பின் மாநாடு இன்று ஆரம்பம்

தென்னாசிய நாடுகளின் ஒசோன் அதிகாரிகள் வலயமைப்பின் மாநாடு இன்று (27) கொழும்பில் ஆரம்பமாகிறது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு சூழல் மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும்  எரிப்பொருள்றுறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் தலைமைத் தாங்கவுள்ளனர்.

சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அப்துல் காதர் உட்பட பல உயரதிகாரிகள் பிரதம அதிதிகளாக இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாளை காலை (27) கொழும்பு கிரேன்ட் ஓரியனடல் ஹோட்டலில் ஆரம்பமாகும் இம்மாநாட்டில்  15 தென்னாசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டை சூழல் மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு- மற்றும் தேசிய ஓசோன் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து ஐநா சூழல் செயற்றிட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

Post a Comment

0 Comments