facebook

அரசாங்கத்தைக் கவிழ்ப்பது குறித்து ஐதேக இரகசிய ஆலோசனை

அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது. ஹோட்டல் ஒன்றில் வைத்து அண்மையில் இதுகுறித்து ஆராயப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அரசாங்கத்திற்கு எதிரான உள்நாட்டு சர்வதேச ரீதியான குற்றச்சாட்டுக்கள், விமல் வீரவன்சவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
  
நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகள், அரச உத்தியோகத்தர்களின் நடவடிக்கை போன்றன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில முழுப் பலத்தையும் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஹரீன் பெர்னாண்டோவை நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தின் பல முக்கிய இரகசியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 - 50 வரையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருகின்றனர் என குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் உடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments