facebook

இடமாற்றத்தை நிறுத்தக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. பத்தாயிரம் ரூபா சம்பளத்துடன் வன்னிக்குச் சென்று தம்மால் கடமையாற்ற முடியாது, எமது வாழ்க்கை செலவைக் கருத்தில் கொண்டு இடமாற்றத்தை நிறுத்துக என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  
சம்பவ இடத்துக்கு வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் சென்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதாக அவர்கள் ஆசிரியர்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

Post a Comment

0 Comments