facebook

அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது – கரு ஜயசூரிய

அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்ற அழகிய சொல்லைப் பயன்படுத்தி அரசாங்கம் ஊழல் மோசடி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆட்சியாளர்கள் நாட்டின் நலனை விடவும் குடும்பத்தின் நலனில் கூடுதல் கரிசனை காட்டி வருகின்றமை துரதிஷ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை ஆகிய அனைத்து விடயங்களும் பாதிக்கப்பட்டு;ளளதாகத் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக்குள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்கள் இலங்கை என்பது தங்களது சொந்த சொத்து எனக் கருதி செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.அரசாங்க் எதேச்சாதிகார போக்கில் மக்களின் நலன்களை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்துள்ளதுடன், சர்வதேச ரீதியிலும் நாடு பாரியளவிலான அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments