facebook

சப்ரகமுவ மாகண இராணுவ வீரர் கௌரவிப்பு விழா இன்று

சப்பிரகமுவ மாகாண இராணுவ வீரர்களை கௌரவிக்கும் விழா இன்று (28) இரத்தினபுரி புதிய நகரமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற - உயிரிழந்த சப்பிரகமுவ மாகாண இராணுவீரர்களை கௌரவிக்கும் வகையில்  பொலிஸார், முப்படையினர் இணைந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தவுள்ளனர்.

சப்பிரகமுவ மாகாண ஆளுநர் வி.ஜ.மு. லொக்குபண்டார- மாகாணத்தில் முதலமைச்சர் மஹீபால ஹேரத்- மற்றும் அமைச்சர்களும் நூற்றுக்கும் அதிகமான அங்கவீனமுற்ற இராணுவத்தினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தாய்நாட்டுக்காக உயிர்தியாகம்  செய்த இராணுவத்தினரது  பெற்றோர்கள் இராணுவ நினைவுச்சின்னத்துக்கருகில் மலரஞ்சலி செலுத்தவுள்ளனர்.

சப்பிரகமுவ மாகாணச்சபை- இரத்தினப்புரி மாவட்டச் செயலகம்- இராணுவ சேவைகள் அதிகாரச்சபை- முப்படையினர்- இலங்கை பொலிஸ் ஆகியன இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

Post a Comment

0 Comments