facebook

சீனாவுடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளது!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்க், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார். 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் சீனா சென்றிருந்த போது சீனா ஜனாதிபதி சந்தித்து பேசியதாகவும் இதன் போது குறித்த உடன்படிக்கை தொடர்பில் சீன ஜனாதிபதி தெளிவாக கருத்து வெளியிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை சம்பந்தமான அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளதுடன் அது சீனாவுக்கு சாதகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments