facebook

நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு: வாயடைத்துப்போன உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியா நாட்டில் வெடிகுண்டை கொண்டு வந்த எம்.பி.யின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள நாடாளுமன்றத்திற்கு சுதந்திர (Liberal) கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி., பில் ஹெபர்னன் என்பவர்,தன்னிடமிருந்த பை ஒன்றில் (pipe) பைப்- வெடிகுண்டை வைத்து கொண்டு வந்திருந்தார்.
அப்போது அங்கு காரசாரமான விவாதம் அரங்கேறிய கொண்டிருக்கையில், தனது பையில் இருந்த வெடிகுண்டை எடுத்து மேஜை மீது வைத்துள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்த பிற கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் செல்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.
இதுகுறித்து அவர் பேசுகையில், பெரிய மரத்தையே சாய்த்துவிடும் திறன் கொண்ட இந்த பைப் வெடிகுண்டை இங்கே நான் கொண்டு வந்துள்ளேன்.
ஆனால் என்னை யாரும் தடுக்கவோ, நான் என்ன கொண்டு வந்துள்ளேன் என்பதை சோதனையிடவோ இல்லை.
அந்ந அளவிற்கு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படாமல் உள்ளது என கூறி, அந்த வெடிகுண்டை, அனைத்து உறுப்பினர்களுக்கும் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து அவர் கையிலிருந்த வெடிகுண்டை, பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி சென்றுள்ளனர்.
மேலும் இனி வரும் காலங்களிலாவது, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments