facebook

நியூஸிலாந்தை இலக்கு வைக்கும் படகு அகதிகள் : அனுமதிக்க முடியாதென வெடிக்கும் பிரதமர் ஜோன் கீ

படகு அகதிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் எல்லைப்புறத்தில் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து மனித கடத்தல்காரர்கள் நியூஸிலாந்தை குறிவைப்பதாக நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய இடங்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோர் தற்போது கென்பராவின் சாப்ம்டவுனை குறிவைப்பதாக கீ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நியூஸிலாந்துக்கு வரும் படகு அகதிகள் எவருக்கும் இலகுவான பயணம் அமையாது என்று கீ எச்சரித்துள்ளார்.
நியூஸிலாந்து எவரையும் பின்கதவால் அனுமதிக்காது என்றும் ஜோன் கே தெரிவித்துள்ளார்.
எனினும், நியூஸிலாந்து நிபந்தனைகளுடன் புலம்பெயர் பணியாளர்களை வரவேற்கிறது என்று கீ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments