facebook

ரணிலின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத மோடி

புதிய இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல முறை முயற்சித்த, அவரின் தொலைபேசி அழைப்புக்கு மோடி பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள ரணில் விக்ரமசிங்க, நரேந்திர மோடி குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, மோடிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் வெற்றி மோடியின் வெற்றி என சிலர் கூறிய போதிலும் அது அவரது வெற்றியல்ல எனவும் அது பாரதீய ஜனதா கட்சியின் வெற்றியெனவும் ரணில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments