facebook

கரையோரப்பகுதிகளில் மழையுடன் காற்றும் வீசலாம் ?

நாட்டின் பெரும்பாலான கரையோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
புத்தளத்திலிருந்து அம்பாந்தோட்டை வழியாக கொழும்பிலிருந்து காலி வரையான கடலோர பிரதேசங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 20-40 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மாத்தறையிலிருந்து கொழும்பு ,முல்லைத்தீவு, மன்னார், சிலாபம்,திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 50 கி.மீ அளவில் வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments