facebook

ஆலோசனை சேவை உதவியாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு

நாடு முழுவதிலும் ஆலோசனை சேவைகளை விஸ்தரிக்கப்பதற்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படும் பிள்ளைகளினதும் பெண்களினதும் மனநிலையை நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகள் ,வழிகாட்டல்கள் , விழிப்பூட்டல்கள் போன்றவற்றை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தேசிய ரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு நாடளாவிய ரீதியில் 220 பட்டதாரிகளை ஆலோசனை உதவியாளராக நியமித்துள்ளது. இவர்கள் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கிளல் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கொன்று தலாஹேனை சனசமூக நிலையத்தில், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தலைமையில் நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எரிக் இளையப்ஆரச்சி மேலதிகச் செயலாளர் சுசீமா விஜேசேகர பெண்கள் பணியக பணிப்பாளர் திருமதி சூலானந்தா உட்பட அதிகாரிகள் பலர் இக்கருத்தரங்களில் கலந்துக் கொண்டனர். 

Post a Comment

0 Comments