facebook

மோடி பதவியேற் : புடில்லியில் கோலாகல ஏற்பாடு

இந்­தி­யாவின் பிர­த­ம­ராக நரேந்­திர மோடி இன்று மாலை பத­வி­யேற்­றுக்­கொள்­கிறார். இத­னை­யொட்டி, டில்­லியில் இடம்­பெறும் கோலாகல வைப­வத்தில் ஹசார்க்' நாடு­களின் தலை­வர்கள் உட்­பட சுமார் 3 ஆயிரம் முக்கியஸ்தர்கள் பங்­கேற்­கி­றார்கள். இதில், ஒரு­வ­ராக பல்­வேறு எதிர்ப்­புக்­களை மீறி இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் பங்­கேற்­கிறார்.
இவர்­களை வர­வேற்க டில்லி தற்­போது ஆயத்­த­மா­கி­யுள்­ளது.
 
 
இந்­தியப் பொதுத் தேர்­தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்­ற­தைத்­தொ­டர்ந்து புதிய பிர­த­ம­ராக நரேந்­திர மோடி இன்று முடி­சூ­டிக்­கொள்­கிறார் அவ­ருடன், அமைச்­ச­ர­வை உறுப்­பி­னர்­களும் பத­வி­யேற்­றுக்­கொள்­கின்­றனர்.
 
3 ஆயிரம் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு அழைப்பு
 
டில்லி ஜனா­தி­பதி மாளி­கையில் மாலை 6 மணி­ய­ளவில் இடம்­பெறும் இந்­நி­கழ்வில் பங்­கேற்க ஹசார்க்' நாடு­களின் தலை­வர்கள் உட்­பட சுமார் 3 ஆயிரம் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு
அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அழைப்பை ஏற்று, இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரீப், மாலை­தீவு ஜனா­தி­பதி உட்­பட ஹசார்க்' நாடு­களின் தலை­வர்கள் பங்­கேற்­கின்­றனர்.
 
சோனியா பங்­கேற்பு
 
இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் மன்­மோகன் சிங், காங்­கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் அமைச்­சர்­களும் இதில் பங்­கேற்­கின்­றார்கள். இவர்­க­ளுடன், மோடியின் தாயார் ஹீரா­பென்னும் விழாவில் பங்­கேற்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், டில்லி களை­கட்­டி­யுள்­ளது.
 
இந்­தியப் பிர­தமர் ஒரு­வரின் பத­வி­யேற்­புக்கு வெளி­நாட்டுத் தலை­வர்கள் அழைக்­கப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல் முறை­யாகும். வாஜ்பாய் பிர­த­ம­ராக பத­வி­யேற்­ற­போதும் ஜனா­தி­பதி மாளிகை முன் வளா­கத்­தில்தான் பத­வி­யேற்றார். இந்­நி­லையில், அவ­ரது சிஷ்­ய­ரான மோடியும் அதே போன்று பத­வி­யேற்­கிறார்.
 
டில்­லியில் உச்­ச­கட்ட பாது­காப்பு
 
இந்த பத­வி­யேற்பு விழா­வை­யொட்டி டில்­லியில் உச்­ச­கட்ட பாது­காப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. விழா இடம்­பெறும் ஜனா­தி­பதி மாளி­கையைச் சுற்றி பல அடுக்கு பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. ஒரே­நே­ரத்தில் முக்­கிய பிர­மு­கர்கள் வருகை தரு­வதால் சுமார் 25 ஆயிரம் பொலிஸார்இ துணை இரா­ணுவப் படை­யினர் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.
 
இலங்கை ஜனா­தி­ப­திக்கு தமி­ழ­கத்தில் எதிர்ப்பு தொடர்­கி­றது...
 
இவ்­வாறு, பத­வி­யேற்பு விழா களை­கட்­டி­யுள்ள நிலையில்இ இந்­நி­கழ்வில் இலங்கை ஜனா­தி­பதி பங்­கேற்­கக்­கூ­டா­தென தமி­ழகம்இ டில்லிஇ பெங்­களூர் உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்கள் தமிழர் ஆத­ரவு அமைப்­பினர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையை முன்­னி­றுத்தி இவர்கள் நடத்­தி­வரும் போராட்­டத்தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.
 
முன்­ன­தாக, இலங்கை ஜனா­தி­ப­திக்கு விடுக்­கப்­பட்­டி­ருக்கும் அழைப்பை இரத்து செய்யும் படி பா.ஜ.க.வின் தமி­ழக கூட்­டணி கட்­சி­க­ளான ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உட்­பட அ.தி.மு.க.இ தி.மு.க., நாம் தமிழர் உள்­ளிட்ட அனைத்து கட்­சி­களும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. ஆனால், இதனை பா.ஜ.க. தலைமை உறு­தி­யாக நிரா­க­ரித்­து­விட்­டது.
 
இவ்­வி­வ­காரம் குறித்து பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொன். ராதா­கி­ருஷ்ணன் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு சமீ­பத்தில் அளித்­தி­ருந்த பேட்­டி­யொன்றில்இ தமிழர் நலன் கரு­தியே இலங்கை ஜனா­தி­ப­திக்கு அழைப்பு விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இந்த சூழ்­நி­லையில், ஜனா­தி­பதி மஹிந்­தவும் பெரும் ஆர்­வத்­துடன் மோடியின் பத­வி­யேற்பு விழாவில் பங்­கேற்­கிறார்
ம.தி.மு.க. புறக்­க­ணிப்பு, தே.மு.தி.க., பா.ம.க. பங்­கேற்பு
 
இத­னி­டையே, பா.ஜ.க.வின் இந்த நட­வ­டிக்கை கண்­டித்து விழாவை புறக்­க­ணிக்கும் முடிவை ம.தி.மு.க. எடுத்­துள்­ளது. அதே­நேரம்இ தே.மு.க.தி.இ பா.ம.க. உள்­ளிட்ட கட்­சிகள் பத­வி­யேற்பு விழாவில் பங்­கேற்­கின்­றன. பா.ம.க. தரப்பில் ராமதாஸ், ஜி.கே.மணி, அன்­பு­மணி உள்­ளிட்ட 10 பேர் இந்­நி­கழ்வில் பங்­கேற்­கின்­றனர்.
 
விஜ­யகாந்த் அறிக்கை
 
இவ்­வி­டயம் தொடர்பில் தே.மு.தி.க. தலைவர் விஜ­யகாந்த் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில், இலங்­கையில் நம் தமி­ழின மக்­களை இனப்­ப­டு­கொலை செய்து கொன்று குவித்த மாபா­தக செயலை எந்த காலத்­திலும் மன்­னிக்­கவும் முடி­யாது, மறக்­கவும் முடி­யாது. இன்­று­வரை தமி­ழக மீன­வர்கள் இலங்கை கடற்­ப­டையால் தாக்­கப்­ப­டு­வதும், படு­கொலை செய்­யப்­ப­டு­வதும் தொடர்­கி­றது. இதற்கு முழு காரணம் இலங்கை அரசே.
 
இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்­காக தே.மு.தி.க. பல ஆண்டு கால­மாக பல போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ளது. தமி­ழ­கத்தில் அ.தி.மு.க. ஆட்­சிக்கு ஆறு மாதங்கள் அவ­காசம் கொடுத்­தி­ருந்துஇ அதன் பின்பு தான் மக்கள் பிரச்­சி­னை­களை சுட்­டிக்­காட்­டினோம். அதேபோல் புதி­ய­தாக பொறுப்­பேற்கும் நரேந்­தி­ர­மோடி ஆட்­சிக்கும் ஆறு மாத காலம் அவ­காசம் தரப்­பட வேண்டும். அதன் பின்பு தான் எந்த விமர்­ச­ன­மாக இருந்­தாலும் வைக்­கப்­பட வேண்டும்.
 
நரேந்­தி­ர­மோ­டியின் பத­வி­யேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை ஜனா­தி­பதி மட்டும் அழைக்­கப்­ப­ட­வில்லை. மாறாக, சார்க் நாடுகள் அமைப்பில் உள்ள 8 நாட்டுத் தலை­வர்­க­ளையும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது'' என்று குறிப்­பிட்­டுள்ளார்.
 
ஜெயாவும் புறக்­க­ணிப்பு
 
இவ்­வி­ழாவை அ.தி.மு.க. பொதுச் செய­லா­ளரும் தமி­ழக முதல்­வ­ரு­மான ஜெய­ல­லி­தாவும் புறக்­க­ணித்­துள்ளார். அவ­ருக்கு பதி­லாக தம்­பி­துரை போன்ற மூத்த உறுப்­பினர் ஒருவர் மரி­யாதை நிமித்­த­மாக அனுப்பி வைக்கக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
 
வைகோ போராட்டம்
 
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ இன்று புதுடில்லியில் கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் டில்லியில் ஜந்தர் மந்திரில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
 
நவாஸ் வருகை
 
இத­னி­டையே, மோடியின் பத­வி­யேற்பு விழாவில் கலந்­து­கொள்ள பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷரீப், இன்று டில்லி வரு­கிறார். இரண்டு நாட்கள் பயணமாக வருகை தரும் இவர், இருநாட்டு உறவுகள் குறித்து மோடியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார்.
 
அனைவரும் 27 இல் பேச்சுவார்த்தை
 
இன்று இடம்பெறும் மோடியின் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து அனைத்து தலைவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருந்தளிக்கிறார்.
இதனையடுத்து, நரேந்திர மோடி அனைவருடனும் 27 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான சவால்கள் பற்றி தலைவர்கள் எடுத்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments