facebook

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்கு விசேட குழு

யுத்த காலப்பகுதியில் காணமாற்போனோர் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அறிக்கை சட்ட மாஅதிபர்  திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்கான குழுவை நியமிக்க வேண்டும் என சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை சட்ட மாஅதிபர் திணைக்களம் பரிசீலனை செய்துவரும் அதேவேளை, இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவை நியமிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச சுட்டிக்காட்டினார்.
யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை 18,580 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments