facebook

அரசாங்கம் மோடியை விட விமல் வீரவன்சவிற்கு அஞ்சுகின்றது – ஐ.தே.க

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விடவும், ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு அரசாங்கம் அதிகளவில் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நரேந்திர மோடிக்கும் அரசாங்கம் அஞ்சியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே அரசாங்கம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் மோடியை விடவும் அரசாங்கம் விமல் வீரவன்சவிற்கு அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச இரண்டு அறிக்கையை வெளியிட்டதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவருடன் சந்திப்பு நடாத்த தீர்மானித்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னதாக 16 முஸ்லிம் பாhராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம்  மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச விரும்புவதாக குறிப்பிட்ட போதிலும், அதற்கு இதுவரையில் ஜனாதிபதி திகதி ஒன்றை ஒதுக்கிக் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனை விடுத்து, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின் மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோர் கடுமையான தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments