facebook

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இன்று (29) மந்தமான காலநிலை தொடர்வதுடன் சிறிதளவிலான மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென் மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று காலையில் சிறிதளவிலான மழை பெய்யலாம் எனவும் குறிப்பாக மேற்கு மாகாணங்களில் இன்று காலை வேளையில் அதிகளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

ஊாவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாலை வேளையிலும் இரவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் மழையுடன் பலத்த காற்று வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதனால் அவற்றினால் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வானிலை அவதானிப்பு நிலையம் வேண்டுகிறது.

Post a Comment

0 Comments