facebook

பிள்ளைகளை பாடசாலையில் உள்வாங்கக் கோரி பண்டாரவளையில் ஆர்ப்பாட்டம்


பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் தமது பிள்ளைகளை உள்வாங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சகல தகுதிகள் இருந்தும் தமது பிள்ளைகளை பாடசாலையில் உள்வாங்க அதிபர் மறுப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

எனவே தமது பிள்ளைகளை பாடசாலைக்கு உள்வாங்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

பாடசாலைக்கு முன்பாக இன்று (28) காலை கூடிய பெற்றோர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments