facebook

பாப்பரசர் இலங்கை வருவது பற்றி எங்களுக்கு தெரியாது : பேராயர் சபை

முதலாம் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்த விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என கத்தோலிக்க பேராயர் சபை அறிவித்துள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்து வத்திக்கானிலிருந்து உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவித்தல்களும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு கிடைக்கவில்லை என கத்தோலிக்கப் பேராயர் சபையின் பேச்சாளர் அருட்தந்தை பெனடிக் ஜோசப் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வமாக வத்திக்கானிலிருந்து தகவல்கள் கிடைத்தன் பின்னர், பொதுமக்களுக்கு பாப்பாண்டவரின் விஜயம் தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Post a Comment

0 Comments