facebook

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவது அரசின் கடப்பாடு அல்ல : தயாசிறி ஜயசேகர

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கடப்பாடு அரசாங்கத்திற்குக் கிடையாது என வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மஹோ – வலஸ்வெவ குணபால மலலசேகர கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
“பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கடப்பாடு அரசாங்கத்திற்குக் கிடையாது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்காக அரசாங்கம் இல்லை. பட்டதாரிகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் பணி. தொழில் வாய்ப்புகளை தேடிக்கொள்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும். ஒவ்வொரு வருடமும் 2500 தொடக்கம் 3,000 மற்றும் 4,000 வரையில் பாடசாலைக் கட்டமைப்பில் இருந்து வெளியேறுகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தில் தொழில்வாய்ப்பு வழங்கினால் எமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தொடர்பில் உங்களுக்குத் தெரியும். பிரதேச செயலாளர் பிரிவில் வேலைவாய்ப்பு வழங்கிய பட்டதாரிகள் இன்று தமது பணிகளை செய்ய முடியாதுள்ளனர். இந்தப் பிரச்சனையை இங்கு தீர்க்க முடியாது,” என்றார்.

Post a Comment

0 Comments