facebook

ஆப்கானிஸ்தான் ஆபத்தான நாடு : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா

ஆப்கானிஸ்தானில் உள்ள அபாயகரமான சூழலால் அந்நாட்டை ஆபத்தான நாடு என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்துள்ளார்.
கடந்த 25ம் திகதி அப்கானிஸ்தானிற்கு இரகசிய சுற்றுபயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மேற்கொண்டார்.
அங்கு பக்ராம் விமானப் படைத்தளத்துக்கு சென்ற அவர் அமெரிக்க இராணுவ வீரர்களிடம் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் அல்-கெய்தா தீவிரவாத அமைப்பு தகர்க்கப்பட்டாலும், பின்லேடனை கொன்றுவிட்டாலும், இன்னும் அது அபாயகரமான இடமாகத்தான் உள்ளது.
எந்நேரமும் இருக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களால், அதிகளவில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
எனினும் இந்த பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை ஒடுக்குவதற்கு, பக்ராமில் உள்ள அமெரிக்க இராணுவ படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என வீரர்களை பாராட்டி கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments