facebook

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியின் புதிய அதிபராக எம்.ஏ.கே.எம்.ஏ.ஹமீட் நியமனம்!


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியின்   புதிய அதிபராக  எம்.ஏ.கே.எம்.ஏ.ஹமீட் கடந்த 26ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.
இதுவரை காலமும் அதிபராக  கடமையாற்றிய  கே.எல்.ஏ.அசீஸ்  தனது 17  வருட சேவையின் பின் இலங்கை தொழில்நுட்பக்கல்விச்சேவையில்   இருந்து  ஓய்வுபெற்றுள்ளார்.

அதனை அடுத்து தொழில்நுட்பக்கல்வி  பயிற்சித்திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் எஸ்.பாலசுப்பிரமணியம்
பல வருட கால இலங்கை தொழில்நுட்பக்கல்விச்சேவையின்   அதிகாரியான  எம்.ஏ.கே.எம்.ஏ.ஹமீடை  அதிபராக நியமித்துள்ளார்

கடந்த 
26 ஆம் திகதி கடமைகளை   பொறுப்பேற்ற  பின்  மாணவர்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்.எம்.ஏ.கே.எம்.ஏ.ஹமீட் அம்பாறை  ஹாடி தொழில்நுட்பக்கல்லூரியின்   பிரதி பணிப்பாளராகவும்.கடமையாற்றியுள்ளார்

Post a Comment

0 Comments