facebook

டெல்லியில் தீடீரென சூறைக் காற்று! 9 பேர் பலி

டெல்லியில் தீடீரென சூறைக் காற்றுடன் கொட்டிய கனமழைக்கு 9 பேர் பலியாகினர். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. 

இந்நிலையில் நேற்று மாலை தீடீரென பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

சாலைகளில் மரங்கள் வேரோட சாய்ந்தன. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன. மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. 

டெல்லியில் முக்கிய பகுதிகளில் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. சூறைக்காற்றுடன் கூடிய மழையால் வடக்கு மற்றும் வடமேற்கு டெல்லி இருளில் முழுகியது. மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதனால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். டெல்லிக்கு வர வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த விமானங்கள் மீது சூறைக்காற்றில் விழுந்த பொருட்கள் மோதியதில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 5 விமானங்கள் சேதம் அடைந்தான. 

24 உள்நாட்டு விமான சேவைகள் தாமதம் ஆகின. வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததிலும், அரந்து விழுந்த மின்சார ஒயர்களில் சிக்கியும், முறிந்து விழுந்த மரங்களின் கீழ் அகப்பட்டும் 9 பேர் பலியாகினர். 

15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்பு பனி முழு வீழ்ச்சில் நடைபெற்று வருவதாக டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments