facebook

அரசாங்க நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது

அரசாங்க நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
ஆணைக்குழுவின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்தமை இவ்வாறு முறைப்பாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு துரித கதியில் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். முறைப்பாடுகள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அரசியல் அழுத்தங்கள் மற்றம் இன்ன பிற காரணிகளினால் விசாரணைகளை சுயாதீனமான முறையில் நடாத்த சாத்தியம் கிட்டுவதில்லை என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments