facebook

ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை


ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு இடையில் இன்று (29) முற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

லொகோமோட்ச் ஒப்பரேட்டிங் பொறியியலாளர் சங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிற்கும் இடையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

கடந்த சில வாரங்களாக ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. 

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து லொகோமோட்ச் ஒப்பரேட்டிங் பொறியியலாளர் சங்க ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசாங்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments