facebook

சம்பூர் அனல் மின்நிலைய பணிகளை துரிதமாக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு நாடுதிரும்பியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுடனான பங்களிப்புடன் நிறுவப்படும் நிலக்கரி மூலமான அனல் மின்நிலையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
திருகோணமலை மாட்டத்தின் சம்பூரில் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையத்தை நிறுவும் பணிகளுக்கான 512 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கூட்டுடன்படிக்கை கடந்த ஒக்டோபரில் இறுதி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் இதன் நிர்மாணப்பணிகளை துரிதமாக்குமாறு சட்டமா அதிபருக்கும் மின் வலு அமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி செயலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இந்தத் திட்டத்தின் கீழ் 250 மெகாவாற் வலுவுடைய இரு மின் பிறப்பாக்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments