facebook

ஹிக்கடுவ கடலில் ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு

ஹிக்கடுவ கடலில் நீராடுவதற்குச் சென்ற ஜேர்மன் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
கடலில் நீராடுவதற்குச் சென்ற ஜேர்மன் பிரஜை, நீண்டநேரமாக கரைக்கு திரும்பாமையினால் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் மிதந்துகொண்டிருந்த அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
74 வயதான ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்ட இந்த ஜேர்மனியப் பிரஜை ஹிக்கடுவ – நாரிகம பகுதியில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments