facebook

சித்தார்த்த குமருக்கு மூன்று மாளிகைகள் - எனக்கு உலகம் முழுதும் ஐந்து மாளிகைகள்! - மேர்வின் சில்வா அதிரடி அறிவிப்பு!

அமைச்சர் மேர்வின் சில்வா அவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் அமெரிக்காவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று கடந்த வாரம் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்ததை தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு காரசாரமாக பதில் அளித்திருந்தார்.
  
இது இவ்வாறிருக்க இவ்விடயம் தொடர்பாக நேற்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் சித்தார்த (புத்த பெருமான்) குமருக்கு ரம்ய,சுரம்ய,சுப என முன்று மாளிகைகள் இருந்ததாகவும் தமக்கு உலகம் முழுதும் அமேரிக்கா ,அவுஸ்திரேலியா.இங்கிலாந்து ,கனடா ,சுவிஸ் ஆகிய நாடுகளில் ஐந்து மாளிகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவைகள் அனைத்தும் வெளிநாட்களில் வாழும் தமது குடும்பத்தினர் ,நண்பர்கள் தமக்கு பாதுகாப்பாக வாழ அன்பளிப்பாக வழங்கியமை எனவும் குறிப்பிட்டுள்ளார் அதேவேளை புத்தபெருமான் காலத்தில் அனே பிண்டு எனும் இளவரசர் புத்தபெருமானுக்கு ஜெதவநாராமையவை பரிசளித்தனை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா தமது நல்ல குனங்களுக்காக தமது குடும்பத்தினர்கள் ,நண்பர்கள் தமக்கு அள்ளி அள்ளி வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் இறப்பதும் இலங்கையில் தான். பின்னர் ருகுனுவில் பிறந்து களனிக்கு வருவேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments