facebook

இளம் மாதர் முஸ்லிம் சங்க முப்பதாண்டு விழா : பலருக்கு சிறப்பு விருதுகள்

இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் முப்பதாண்டு  பூர்த்தி விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரின் பாரியாரும் ,பாகிஸ்தான் பெண்கள் அமைப்பின் தலைவியுமான ருஷ்தா குறைஷி ,மகப்பேற்று வைத்திய நிபுணரான டாக்டர் பஸ்லி நிசார்.  சங்கப்போசகரான ஹாலிதா சஹாப்தீன் சிரேஷ்ட ஊடகவியலாளரான ரஷீட் எம்.ஹபீல்  மற்றும் இசைகோகிலம் பட்டத்தை பெற்ற பிரபல பாடகியான கலாபூசணம் நூர்ஜஹான் மர்சூக் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டோராவர்.
இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் 30 ஆண்டு பூர்த்தி விழா கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை சங்கத்தின் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள சபையர் ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் ஏசியா பெப்ரிக் நிறுவனத்தின் பணிப்பாளர் மஸாஹிரா ஜாபிர் பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவரின் பாரியாரும் ,பாகிஸ்தான் பெண்கள் அமைப்பின் தலைவியுமான , காலித் பாரூக் உட்பட பிரமுகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர்.
கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்கள் வழங்கிய முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி சபையோரை வெகுவாக கவர்ந்தது. மேலும் பல கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இலங்கையின் பிரபல பாடகிகளான நூர்ஜஹான் மர்சூக், கைரியா இஸ்மாயில், மொயினா பேகம் உட்பட பலரது  பாடல்களும் இவ்விழாவை அலங்கரித்தன.

சங்கப்பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹாவை இதழாசிரியையாக கொண்ட இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் செய்தி இதழான 
'அந்நூர்என்ற பத்திரிகையும் , இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் உதவிச் செயலாளர் சுரையா ரிஸ்வியை ஆசிரியையாக கொண்ட  சிறப்பு மலர் ஒன்றும் இவ்விழாவில்  வெளியிடப்பட்டன.

சங்க முயற்சிகளுக்கு பலவகையிலும் பங்களிப்புச்செய்த சங்கத்தின் தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் உட்பட சங்க உறுப்பினர்கள் 
பலரும் இவ்விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

Post a Comment

0 Comments