facebook

இலங்கையின் அனைத்து பிரதான உற்பத்திகளுக்கும் ஹலால் சான்றிதழ் : சிங்கள பத்திரிகை வெளியிட்ட செய்தி

இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதை நிறுத்த கோரி சில பெளத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததனை தொடர்ந்து அகில இலங்கை ஜமியதுள் உலமா சபை சான்றிதழ் ஹலால் சான்றிதழ் வழங்குவதில் இருந்து தவிர்ந்து கொண்டது.

சில பேரினவாத அமைப்புகள் ஹலாளுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருந்தாலும் சில தனியார் நிருவனங்களின் ஏற்றுமதி மற்றும் இலங்கைக்கு வரும் முஸ்லிம் சுற்றுலா பயணிகளின் நுகர்வுகளுகாக  ஹலால் சான்றிதழ் இன்றியமையாத ஒன்றாக இருந்ததன் காரணமாக அந்நிறுவனங்கள் பாராளுமன்றம் வரை சென்று ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை தடை செய்ய கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்தன.

அதனை தொடர்ந்து ஜம்மியத்துல் உலமா ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைக்கு மாற்றீடாக ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கென ஹலால் எசெர்டியேசன் கவுன்சில் என்ற பொது நிறுவனமம் நிறுவப்பட்டு இரண்டாயிரத்து பதினான்காம் வருடம் முதல் அந்நிறுவனம் ஊடாக ஹலால் சான்றிதழ் வழங்கி வருகிறது.
 
ஹலால் தேவை இல்லை என சில பெளத்த அமைப்புகள் கூறிவந்தாலும் நேற்று சில சிங்கள மொழி பத்திரிகைளில் இவ்வருடம் ஹலால் எசெர்டியேசன் கவுன்சில் உடாக ஹலால் சான்றிதழ் பெற்ற நிறுவங்களின் பெயர்பட்டியல் பிரதான இடம் பிடித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

Post a Comment

0 Comments