facebook

பழுதடைந்த மின்சாதனப் பொருள் சேகரிப்பு வாரம் இன்று

இன்று (27)  தொடக்கம் பழுதடைந்த மின்சாதனப் பொருள் சேகரிப்பு வாரம் ஆரம்பமாகிறது.
தேசிய பழுதடைந்த மின்சாதனப் பொருள் மீள்சுழற்சி திட்டத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகாரச்சபை இவ்வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

இன்று (27) தொடக்கம் எதிர்வரும் 2ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் இத்தினத்தில் நாடுமுழுவதிலுமுள்ள பழுதடைந்த மின்சாதனப் பொருட்கள் சேகரிக்கப்படவுள்ளது.

பழுதடைந்த மின்சாதனப் பொருட்களை சேகரிப்பதற்கான தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்று (26) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலக்க மெதுரவில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்.

இவ்வாரம் தொடர்பான மேலதிக தகவல்களை 071 969 2005 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments