facebook

காத்தான்குடியில் விபச்சாரம் பெருகும் அவலம்

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், உள்ளுர் பெண்ணொருவரை ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு முச்சக்கரவண்டியில் அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை அவதானித்த அப்பிரதேசப் பொதுமக்கள் அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்து காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும், இதில் சம்பந்தப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதியும் பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்தில் விபச்சாரங்கள் அதிகரித்து வருகிறது என காத்தான்குடியிலிருந்து வெளியாகும் வாரஉரைகல் பத்திரிகை தெரிவித்துள்ளது. நடப்பு வாரத்தில் மாத்திரம் இரு விபச்சாரச் சம்பவங்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு பள்ளிவாசலுக்கும், பொலிஸ் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாக பள்ளிவாசல் பிரமுகர் ஒருவர் ‘வார உரைகல்’லிடம் தெரிவித்தார்.
திருமணம் செய்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், அவரது மனையின் விவகாரத்துப் பெற்ற தங்கையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த விவகாரமும் அயலவர்களால் அலதானிக்கப்பட்டு அவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்த சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.
இவர்களுக்கான மார்க்கத் தண்டனை நேற்றிரவு (25) காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் இஷாத் தொழுகையின் பின் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி நகரத்தில் இஸ்லாத்திற்கு விரோதமான விபச்சாரம், வட்டி, மதுபாவனை போன்ற வெறுக்கப்பட்டதும், தடுக்கப்பட்டதுமான விடயங்கள் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இடம்பெற்று வருவது குறித்து பரவலாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

Thanks To: jvpnews

Post a Comment

0 Comments