facebook

அக்குறனையில் இரண்டு கட்டுத்துவக்குகளுடன் சிறுவன் கைது


மட்டக்களப்பு - அக்குறானை பிரதேசத்தில் இரண்டு கட்டுத்துவக்குகளுடன் சிறுவன் ஒருவன் நேற்று மாலை (27) கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, மினுமினுத்தவெளி அக்குறானையைச் சேர்ந்த 17 வயது சிறுவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடம் இருந்தது இரண்டு துவக்குகளையும் கைப்பற்றியுள்ளனர். 

மேலும் சிறுவனை இன்று (28) வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments