facebook

இங்கிலாந்து இளவரசி கேட்டின் அரைகுறைப்படம் அம்பலம்: பரபரப்பை ஏற்படுத்திய செய்தித்தாள்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட்டின் அரைகுறை புகைப்படம் செய்தித்தாள் ஒன்றில் வெளியாகியுள்ளது.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கிய அவுஸ்திரேலிய அமெரிக்கரான ரூபர்ட் முர்டா, தனது சொந்த செய்தித்தாளான ’நியூஸ் ஆப் தி வேர்ல்டு’ பத்திரிகையில், இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட்டின் அரைகுறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படம் கடந்த மாதம் வில்லியம்ஸ்- கேட் தம்பதியர் தங்களது அவுஸ்திரேலிய சுற்றுபயணத்தின்போது எடுக்கப்பட்டுள்ளது.
இதில் 'ப்ளூ மவுன்டெய்ன்ஸ்' என்னும் மலைப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி அவர்கள் நடந்து செல்கையில், பலமாக காற்று அடித்ததில் கேட்டின் கவுன் பறந்துள்ளது.
அப்போது தெரிந்த அவரது ஆடையில்லா பின்னழகு(bare bottom) புகைப்படம் பிடிக்கப்பட்டு செய்தித்தாளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையான குளோசர் கேட்டின் மேலாடையில்லா புகைப்படத்தை (topless) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த புகைப்படம் வெளியானது அரச குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments