facebook

அனல் மின் நிலையத்தை பார்வையிட ஐதேக குழு நுரைச்சோலை செல்லவுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நுரைச்சோலை அனல் மின் நிலைய அபிவிருத்தித் திட்டப் பணிகளை பார்வையிட உள்ளனர்.
அண்மையில் மத்தல விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முதல் தடவையாக அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டமொன்றை பார்வையிட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நுரைச்சோலைக்கு இன்றைய தினம் விஜயம் செய்ய உள்ளனர்.
தாம் உள்ளிட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுரைச்சோலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments