facebook

வட பகுதி பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசின் புதிய திட்டம்

பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் வட பகுதியில் பெண்உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய திட்டம் குறித்து முப்படையினருக்கும் விளக்கமளிக்கும் கருத்தரங்கொன்று சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்ர் திஸ்ஸ கரலியத்த தலைமையில் கடந்த புதனன்று கிளிநொச்சி இரணைமடு (நெலும் பியச) "தாமரை இல்லம்" கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபகஷவின் வேண்டுகோளுக்கிணங்க சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்ர் திஸ்ஸ கரலியத்தவின் பணிப்புரையின் பேரில் தேசிய மகளிர் அமைப்பு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட வட பகுதியைச் சேர்ந்த பாதுகாப்புப்படை பிரதிநிதிகள் சுமார்200பேர் இந்த கருத்தரங்கில் பங்குபற்றினர்.
கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ,சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எரிக்இலயப்ஆரச்சி ,தேசிய மகளிர் அமைப்பின் தலைவி கலாநிதி நீலா குணசேகர ,சிறுவர் துஷ்பிரயோகததை தடுப்பது தொடர்பான களுத்தறை பொலிஸ் பயிற்சிக்கல்லூரியின் விரிவுரையாளர் புத்திக பாலசந்திர ,சமூகசேவைகள் அமைச்சின் ஆலோசகர் ஏ.எப்.எம்.அஷார் ஆகியோரும் இங்கு கருத்துரைகளை வழங்கினர்.
கிளிநொச்சி  மாவட்ட மேலதிகச் செயலாளர் எம் ஸ்ரீநிவாசன், தேசிய மகளிர் அமைப்பின நிருவாகப்பணிப்பாளர் எம்.கே.ஆரியரத்ன  கிளிநொச்சி இராணுவப்படை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோரும் இதில் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

0 Comments