facebook

இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இந்தியா இணக்கம்

இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு மத்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. 85 இலங்கை மீனவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர். ஒடிஸா மற்றும் ஆந்திர பிரதேச சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தடுத்து வைத்திருந்த இந்திய மீனவர்களை விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments