facebook

வனவாசலவில் வாகன விபத்து : பல்கலைக்கழக மாணவி பலி

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வனவாசல மேம்பாலத்தில் இன்று அதிகாலை காரொன்று விபத்துக்குள்ளானதில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 24 வயதான யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
இந்த விபத்தில் காரில் பயணித்த மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments