facebook

தபாலில் வந்த பெண்ணின் சடலம்

ஜப்பானில் பொம்மை என ஏமாற்றி தபாலில் பெண் ஒருவரின் சடலம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த ரிகா ஒகாடா (29) என்ற பெண் செவிலியராய் பணிபுரிந்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் காணாமல் போன இவர், தனது பேஸ்புக்கில் தன் பழைய நண்பரை சந்திக்கபோவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டிற்கு, சுமார் 2 மீற்றர் அளவில் பெட்டி ஒன்று ‘பொம்மை’ என எழுதப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதை பார்த்த பொலிசார் சந்தேகமடைந்ததால், அந்த பெட்டியை பிரித்ததில் திகைத்து போயினர்.
அதில் ஒகாடாவின் சடலம் பொட்டலமாய் கட்டி வைக்கப்பட்டிருந்தது.மேலும் அவரது உடலெங்கும் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில், ஷாங்காய் சென்ற விமானத்தில் இவருடன் ஒரு சீன பெண் ஹனேடாவுக்கு பயணம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அப்பெண்ணிடம் இவரது மர்மமான மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments