facebook

யாழ். உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி கொழும்பில்


வடமாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் மத்திய கைத்தொழில் உற்பத்தியாளர்களின் சந்தைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலான கண்காட்சியொன்று நேற்று கொழும்பில் ஆரம்பமானது.
பத்தரமுல்லை தியத்த உயன கண்காட்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 250 உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இறுதிநாளான நாளை கொழும்பு குதிரைப்பந்தய மைதானத்தில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments