facebook

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெற்கு அதிவே நெடுஞ்சாலையின் தொடங்கொட பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


கடமைக்காக மோட்டார் காரில் சென்று கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை, கப் வண்டியொன்றில் பின்தொடர்ந்து சென்ற சிலர் தாக்கியுள்ளனர். 
பொலிஸ் அதிகாரியை கடுமையாகத் தாக்கி அவர் பயணம் செய்த வாகனத்திற்கு தீ மூட்டியுள்ளனர். 


சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியை களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


சந்தேகத்திற்கு இடமான வாகனமொன்று தம்மை பின்தொடர்வதனை அறிந்து கொண்ட பொலிஸ் அதிகாரி வேகமாக பயணித்த போதிலும், கப் வாகனத்தில் சென்றவர்கள் மோட்டார் காரை வழிமறித்து பொலிஸ் அதிகாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். 


பொலிஸ் அதிகாரியின் மோட்டார் கார் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.

Post a Comment

0 Comments